Tuesday, July 16, 2013

தேவதானம் பெரிய கோயிலில் கும்பாபிஷேகம்.



தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற பஞ்சபூத தலங்களில்
ஆகாய தலமாக அழைக்கப்படும் தேவதானம் பெரியகோயில் கும்பாபிஷேகம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
   ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பெரியகோயில் அன்னை தவம்பெற்றநாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 53 ஆண்டுகளுக்குப் பிறகு  கும்பாபிஷேகம் நடைபெற்றது.
   கடந்த 11-ஆம் தேதி முதல் பூஜைகள் துவங்கி, கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றன. பூஜை முடிந்ததும், புனிதகலசங்கள் சுவாமி அம்மன் விமானங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு  கும்பாபிஷேகம் காலை 8.20-க்கு துவங்கி நடைபெற்றன.
   சுவாமி, அம்மனுக்கு சிறப்பு மஹா அபிஷேக அலங்கார பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ராஜபாளையம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் துரைராஜ்சேகர், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் செல்வசுப்பிரமணியராஜா மற்றும் திருப்பணி  கமிட்டியினர் அறங்காவல்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
 தேதி  (14.7.2013) நன்றி : தினமணி நாளிதழுக்கு .