கோல்கட்டா: இந்திய அரசியலமைப்பு முறையில் உள்ள ஷரத்துக்கள் சில
நேதாஜியின் சிந்தனையில் தோன்றியவைகளாக உள்ளன என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
கூறினார். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
குறித்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பில் உள்ள சில ஷரத்துக்களான மாநில
அரசுகளின் நேரடிக்கொள்கை, ஐந்தாண்டு திட்டம் உள்ளிட்ட ஷரத்துக்கள் நாடு
சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றன. இத்தகைய
ஷரத்துக்கள் நேதாஜின் எண்ணத்தில் உதித்தவை . இந்திய தேசிய காங். கட்சியின்
தலைவராக நேதாஜி இருந்த போது தான், பிரதமராக இருந்த நேரு, ஐந்தாண்டு
திட்டத்தினை செயல்படுத்த திட்டக்கமிஷனை அமைத்தார். இன்று வெளியிடப்படும
நூல், நேதாஜியின் தியாகம், சேவையினை வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி பேசினார்
நன்றி தினமலர் நாளிதழுக்கு (20-1-2013).
நன்றி தினமலர் நாளிதழுக்கு (20-1-2013).