நடிகர் பெரிய கருப்பு தேவர் மாரடைப்பால் மரணம்
06:05:32
Wednesday
2012-09-19
சென்னை:
பிரபல நடிகர் பெரிய கருப்பு தேவர் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.
அவருக்கு வயது 75.‘மண்வாசனை, ‘விருமாண்டி உட்பட இரு நூறு படங்களுக்கு மேல்
நடித்தவர் பெரிய கருப்பு தேவர். அவரது மகன் பால்பாண்டிக்கு ஆறு நாட்களுக்கு
முன் ஆண்குழந்தை பிறந்தது. பேரனை பார்க்கப் போகும் ஆவலில் பலமாகச்
சிரித்தாராம் பெரிய கருப்பு தேவர். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட் டது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் மாரடைப்பால் உயிர்
பிரிந்துவிட்டது. அவர் உடல் சாலிகிராமத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டது.
உடல் அடக்கம் உசிலம்பட்டி அருகிலுள்ள கருமாத்தூரில் இன்று நடக்கிறது.‘பூ‘
படத்தில் இடம்பெற்ற, ‘சிவகாசி ரதியே‘, ‘விருமாண்டி‘ படத்தில் ‘கருமாத்தூர்
காட்டுக்குள்ள‘ உட்பட சில பாடல்களை பாடியுள்ளார். பெரிய கருப்புத்
தேவருக்கு அன்னமயில் என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். ஒரு மகன்
விருமாண்டி இணை இயக்குனராகவும், கார்த்திக் ஆர்ட் டைரக்டராகவும் உள்ளனர்.
No comments:
Post a Comment